கடந்த புதன்கிழமை இரவு கேமி சூறாவளி தைவானை தாக்கியது. இதனால், கடும் காற்று மற்றும் கன மழை பதிவானது. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்தில் தைவானை தாக்கிய மிக வலுவான சூறாவளி புயலாக இது கருதப்படுகிறது. இதனால், மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டது மட்டுமின்றி, உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளது.
கேமி சூறாவளி தைவானை தாண்டிய சமயத்தில், குறைந்தது 227 பேர் காயமடைந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது, சூறாவளியின் சீற்றம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சீனாவின் ஃபூஜியன் மாகாணத்தை நோக்கி நகர்ந்து வரும் இந்த சூறாவளி புயல், இந்த வார இறுதியில் நிலத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சீனாவில் கனமழை பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.