ஐக்கிய அரபு அமீரகத்தில் கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி வழங்கும் சட்டத்திற்கு மந்திரி சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமை குறித்து உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் கர்ப்பமாகி 120 நாட்களுக்குள் கருக்கலைப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கட்டாய உறவுக்கு ஆளாகி கர்பமான பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமான பெண்கள் ஆகியோருக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கருக்கலைப்பு பெண்ணின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காமல் இருக்க வேண்டும். இதன் மூலம் பெண்களின் சுகாதாரம் உறுதி செய்யப்படும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். எனவே இது மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கையாக கருதப்படுகிறது. இது இந்த தீர்மானம் தொடர்பாக அரசாணை வெளியிடப்படும். அதன் பிறகு இது அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.