கடந்த வருட மார்ச் மாதத்தில் கிரெடிட் சூயிஸ் வங்கியை யுபிஎஸ் கையகப்படுத்தியது. கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மிகப்பெரிய வங்கி இணைப்பு நடவடிக்கை இதுவாகும். இந்த இணைப்பு நடவடிக்கையின் பகுதியாக பணி நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த சுற்று பணி நீக்கத்தை யுபிஎஸ் அறிவித்துள்ளது.
கிரெடிட் சூயிஸ் இணைப்புக்குப் பிறகு 3000-க்கும் மேற்பட்டோர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த முறை நூற்றுக்கணக்கானோரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக யூபிஎஸ் தெரிவித்துள்ளது. வரும் வாரங்களில் இந்த பணி நீக்கங்கள் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சுற்றில், வெல்த் மேனேஜ்மென்ட் மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.