பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்தில் காட்சி அரங்கத்தை திறந்தார் உதயநிதி

பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்தில் காட்சி அரங்கத்தை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் மதிப்பீட்டு மையம் (Assessment Cell), காட்சி அரங்கம் ஆகியவை நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘14417’ என்ற உதவி எண்ணுக்கான அழைப்பு மையமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி […]

பள்ளிக்கல்வி தலைமை அலுவலகத்தில் காட்சி அரங்கத்தை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் மதிப்பீட்டு மையம் (Assessment Cell), காட்சி அரங்கம் ஆகியவை நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ‘14417’ என்ற உதவி எண்ணுக்கான அழைப்பு மையமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இவற்றை திறந்து வைத்தார்.

பின்னர், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வெளியீட்டு பிரிவு புத்தக விற்பனை மையத்தை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நூல்களை வழங்கினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu