சஞ்சய் பந்தாரியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் முடிவு

November 8, 2022

இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் சஞ்சய் பந்தாரியை, இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத்துறை விவகாரங்களில் முறைகேடாக ஈடுபட்டதாக சஞ்சய் பந்தாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக, பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற அவரை, கைது செய்யும்படி இந்தியா பிரிட்டன் அரசை கேட்டுக்கொண்டது. தற்போது, அவர் மீது பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் கிடைத்த வருமானம் மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய விவரங்களை அவர் இந்திய அரசிடம் இருந்து […]

இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் சஞ்சய் பந்தாரியை, இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறை விவகாரங்களில் முறைகேடாக ஈடுபட்டதாக சஞ்சய் பந்தாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக, பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற அவரை, கைது செய்யும்படி இந்தியா பிரிட்டன் அரசை கேட்டுக்கொண்டது. தற்போது, அவர் மீது பண மோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் கிடைத்த வருமானம் மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய விவரங்களை அவர் இந்திய அரசிடம் இருந்து மறைத்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இது தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதால், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றத்தை இந்தியா கேட்டுக்கொண்டது. அதன் படி நடந்த வழக்கு விசாரணையில், அவரை நாடு கடத்தும் படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சூயல்லா பிராவர்மன் ஒப்புதல் அளித்த பின்னர், அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu