இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டேவிட் லாமி இன்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டு, கீவ் நகரில் சிறப்பான வரவேற்பைப் பெற்றார். இந்த பயணத்தின்போது, உக்ரைனுக்கு ரூ.602.96 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த உதவியில், உலக உணவு திட்டத்தின் கீழ், போர் பாதித்த சிரியாவுக்கு உக்ரைன் ரூ.32.87 கோடி மதிப்பிலான தானியங்களை அனுப்பும் திட்டமும் உள்ளது. மேலும், ரஷியாவின் தாக்குதலால் சேதமடைந்த ஆற்றல் நிலையங்களை பராமரிக்க ரூ.148.61 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் கடந்த மாதம் உக்ரைன் சென்றிருந்த நிலையில், இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.