தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டு கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் மீது சீன கடலோர காவல் படை கப்பல் நேற்று மோதியது.
இந்த சம்பவம் சபீனா மணல் திட்டுக்கு அருகே நடந்தது. இதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி கொண்டுள்ளனர். இது குறித்து சீன கடலோர காவல் படை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மணல் திட்டுக்கு அருகே வந்தது. அப்பொழுது எங்கள் கப்பலில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பினோம். அதை பொருட்படுத்தாமல் ஒரு பிலிப்பைன்ஸ் கப்பல் எங்கள் மீது வந்து மோதியது என்று குற்றம் சாட்டியது. ஆனால் பிலிப்பைன்ஸ் தரப்பில் சீன கப்பல் சட்டவிரோதமாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தென் சீன கடலில் அனைத்து பகுதியிலும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா நாடுகளும் உரிமை உள்ளது என்று வேண்டுகின்றன.