வரலாற்றில் முதல் முறையாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய உக்ரைன் மக்கள்

December 26, 2023

உக்ரைன் நாட்டில், ஜனவரி 7ஆம் தேதியே கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரலாற்றில் முதல் முறையாக, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, உக்ரைன் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளனர். ரஷ்ய அரசின் பாரம்பரிய முறைப்படி, ரஷ்ய கண்டத்தில் உள்ள பல நாடுகள் ஜனவரி மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக, ரஷ்யாவின் பாரம்பரிய முறையை எதிர்க்கும் வகையில், உக்ரைனில், […]

உக்ரைன் நாட்டில், ஜனவரி 7ஆம் தேதியே கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரலாற்றில் முதல் முறையாக, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி, உக்ரைன் மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

ரஷ்ய அரசின் பாரம்பரிய முறைப்படி, ரஷ்ய கண்டத்தில் உள்ள பல நாடுகள் ஜனவரி மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக, ரஷ்யாவின் பாரம்பரிய முறையை எதிர்க்கும் வகையில், உக்ரைனில், கடந்த டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, உக்ரைன் மக்கள் ஒன்றிணைந்து பண்டிகையை கொண்டாடி உள்ளனர். அதன்படி, வரலாற்றில் முதல் முறையாக, ஜூலியன் நாட்காட்டி முறையை தவிர்த்து, கிரகோரியன் நாட்காட்டி முறைப்படி, உக்ரைனில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu