ரஷ்யாவின் 34 ட்ரோன்கள் அழிப்பு - உக்ரைன் அறிவிப்பு

September 28, 2023

நேற்று இரவு தங்கள் நாட்டை நோக்கி வந்த ரஷ்ய நாட்டின் ட்ரோன்களை தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது. நேற்று இரவில், ரஷ்யாவில் இருந்து மொத்தம் 44 ட்ரோன்கள் வந்ததாகவும், அவற்றில் 34 ட்ரோன்களை உக்ரைனின் விமானப்படை தாக்கி அழித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது, உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் ஒடெசா மாகாண ஆளுநர் ஒலே கைப்பர் இந்த தகவலை டெலெக்ராம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நாட்டு விமானப்படை மிகவும் சிறப்பாக […]

நேற்று இரவு தங்கள் நாட்டை நோக்கி வந்த ரஷ்ய நாட்டின் ட்ரோன்களை தாக்கி அழித்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது.
நேற்று இரவில், ரஷ்யாவில் இருந்து மொத்தம் 44 ட்ரோன்கள் வந்ததாகவும், அவற்றில் 34 ட்ரோன்களை உக்ரைனின் விமானப்படை தாக்கி அழித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது, உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் ஒடெசா மாகாண ஆளுநர் ஒலே கைப்பர் இந்த தகவலை டெலெக்ராம் மூலம் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நாட்டு விமானப்படை மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் முதல், உக்ரைனின் தானியக் கிடங்கு அமைந்திருக்கும் ஒடெசா மாகாணத்தை குறிவைத்து ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu