கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர் - காயங்களுடன் உயிர் தப்பினார்

September 15, 2022

உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலஸ்கி சென்ற கார் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன் நகரங்கள் மீட்டெடுக்கப்பட்டன. அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட உக்ரைனின் வடகிழக்கு நகரங்களுக்கு அதிபர் விளாடிமிர் ஜெலஸ்கி, புதன்கிழமை அன்று திடீர் பயணம் மேற்கொண்டார். கார்கீவ், கீவ், இசியம் போன்ற பகுதிகளை அவர் பார்வையிட்டார். போரினால் பலத்த சேதம் அடைந்த நகரங்களைப் பார்வையிட்டு விட்டு, தலைநகருக்கு அதிபர் திரும்பி உள்ளார். அதன் பின்னர், வியாழக்கிழமை அதிகாலையில், அதிபரின் அணிவகுப்பின் போது […]

உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலஸ்கி சென்ற கார் விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ரஷ்யா கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன் நகரங்கள் மீட்டெடுக்கப்பட்டன. அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட உக்ரைனின் வடகிழக்கு நகரங்களுக்கு அதிபர் விளாடிமிர் ஜெலஸ்கி, புதன்கிழமை அன்று திடீர் பயணம் மேற்கொண்டார். கார்கீவ், கீவ், இசியம் போன்ற பகுதிகளை அவர் பார்வையிட்டார்.

போரினால் பலத்த சேதம் அடைந்த நகரங்களைப் பார்வையிட்டு விட்டு, தலைநகருக்கு அதிபர் திரும்பி உள்ளார். அதன் பின்னர், வியாழக்கிழமை அதிகாலையில், அதிபரின் அணிவகுப்பின் போது பயணிகள் வாகனம் ஒன்று அதிபர் வாகனத்துடன் மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த கார் விபத்தில் அவர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பியதாகச் சொல்லப்படுகிறது. அவரது நேரடி செய்தி தொடர்பாளர் நிகிபோரோவ் இதனை முகநூலில் தெரிவித்துள்ளார்.

அதிபருடன் சென்ற மருத்துவர்கள் விரைவாக அவருக்கு முதலுதவி செய்ததாகவும், அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. வாகன ஓட்டுனரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu