லிஜி நகரை மீட்ட உக்ரைன் - ரஷ்யாவிற்கு பின்னடைவு

September 13, 2022

உக்ரைன் - ரஷ்யா போரில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, உக்ரைன் வீரர்கள் போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ரஷ்யாவின் பிடியில் இருந்த கார்கிவ் மா லிஜி நகரம், ரஷ்ய ராணுவத்தினரின் முக்கியப் போக்குவரத்து தளமாக இருந்து வந்தது. அதனைத் தற்போது, உக்ரைன் மீட்டுள்ளதால், இது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே வேளையில், […]

உக்ரைன் - ரஷ்யா போரில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, உக்ரைன் வீரர்கள் போரில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ரஷ்யாவின் பிடியில் இருந்த கார்கிவ் மா

லிஜி நகரம், ரஷ்ய ராணுவத்தினரின் முக்கியப் போக்குவரத்து தளமாக இருந்து வந்தது. அதனைத் தற்போது, உக்ரைன் மீட்டுள்ளதால், இது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே வேளையில், உக்ரைனின் போக்ரோவொஸ்க், நிகோலவ் - கிரிவோய் ஆகிய மாகாணங்களில் ரஷ்ய ராணுவம் தீவிரமான போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்ற நிலை நிலவி வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வரும் உக்ரைன் - ரஷ்யா போரினால், 1400 பொதுமக்கள் உயிரிழந்து உள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. அத்துடன், லட்சக்கணக்கான போர் வீரர்களும் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனால், 80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உக்ரைன் நாட்டுக்கு பொருளாதார இழப்பு நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போரினால் உக்ரைன் ரஷ்யா மட்டுமல்லாது, உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார ரீதியில் பாதிப்படைந்து உள்ளன.
காணத்தின் குபியான்ஸ்க் நகரை உக்ரைன் அண்மையில் மீட்டது. தற்போது, அதே மாகாணத்தில் உள்ள லிஜி நகரையும் உக்ரைன் மீட்டு உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu