கடந்த 2022 பிப்ரவரி முதல் உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்று வருகிறது. தற்போது, உக்ரைன் ரஷ்யா இடையே மிகப்பெரிய அளவில் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தனது சமூக வலைதள பக்கத்தில் கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்ததை குறிப்பிட்டுள்ளார். 200க்கும் மேற்பட்ட வீரர்கள் இருதரப்பிலும் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போர் தொடங்கிய பிறகு நிகழும் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவாகும். ஐக்கிய அரபு அமீரகம் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக, இருதரப்பு கைதிகள் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம், “248 ரஷ்ய வீரர்கள் திரும்பி உள்ளனர். அவர்களுக்கான மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே, உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.