உக்ரைனின் இராணுவ வளங்கள் தீர்ந்தது - ரஷ்யா

August 16, 2023

உக்ரைனின் ராணுவ வளங்கள் கிட்டதட்ட தீர்ந்து விட்டன என்று ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மேற்கு நாடுகளின் நிதி மற்றும் ஆயுத உதவி இருந்த போதிலும் உக்ரைன் போரில் வெல்ல முடியவில்லை. ஏனெனில் மேற்கு நாடுகள் அளித்த ஆயுதங்களால் ரஷ்ய ஆயுதங்களை வெல்ல முடியவில்லை. ரஷ்ய போர் நிலைகள் […]

உக்ரைனின் ராணுவ வளங்கள் கிட்டதட்ட தீர்ந்து விட்டன என்று ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், மேற்கு நாடுகளின் நிதி மற்றும் ஆயுத உதவி இருந்த போதிலும் உக்ரைன் போரில் வெல்ல முடியவில்லை. ஏனெனில் மேற்கு நாடுகள் அளித்த ஆயுதங்களால் ரஷ்ய ஆயுதங்களை வெல்ல முடியவில்லை. ரஷ்ய போர் நிலைகள் பலமாக உள்ளது. எனவேதான் பக்மத் பகுதியை உக்ரைன் கைப்பற்றிய போதிலும், அதனை எதிர்த்துப் போரிட உக்ரைனால் முடியவில்லை. அது நிலை தடுமாறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த மாநாட்டிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த நாடுகள் சார்பாக அதன் பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டனர். எனினும் மேற்கு நாடுகள் அழைக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu