ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.
உக்ரைனில் இருந்து ரஷ்ய ராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐ.நா. பொது சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் மற்றும் அதன் ஆதரவு நாடுகளால் வரைவுத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஐ.நா. ஒப்பந்தத்தின்படி உக்ரைனில் விரிவான, நியாயமான, நீடித்த அமைதிக்கான சூழலை விரைவில் உருவாக்குவது தொடர்பான இந்தத் தீர்மானத்தின் மீது விவாதமும் நடைபெற்றது.
விவாதத்தைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 141 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 7 நாடுகள் எதிராக வாக்களித்தன. இந்தியா உள்பட 32 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.