பாகிஸ்தானில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம் இடிப்பு

November 30, 2023

பாகிஸ்தானில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கோயில் இடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் ஹிங்லாஜ் மாதா மந்திர் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சுற்றுப்புற சுவர் மற்றும் கோவிலின் உட்புற பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த கோவில் இடிக்கப்பட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்கு அருகே அமைந்துள்ள சாரதா பீடத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்துக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். யுனெஸ்கோ அமைப்பின் நிர்வாகக் குழு துணைத் தலைவராக பாகிஸ்தான் […]

பாகிஸ்தானில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கோயில் இடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் ஹிங்லாஜ் மாதா மந்திர் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சுற்றுப்புற சுவர் மற்றும் கோவிலின் உட்புற பகுதிகள் இடிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த கோவில் இடிக்கப்பட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லைக்கு அருகே அமைந்துள்ள சாரதா பீடத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்துக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். யுனெஸ்கோ அமைப்பின் நிர்வாகக் குழு துணைத் தலைவராக பாகிஸ்தான் உள்ளது. ஆனால், தொடர்ந்து யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களாக கருதப்படும் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu