பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் 18ம் தேதி தொடங்குகிறது. இதில் 18ஆம் தேதி பழைய பாராளுமன்றத்திலும், 19ஆம் தேதியில் இருந்து புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த முக்கியமான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும் மாநில மற்றும் மக்களவை தேர்தல் வருவதையொட்டி பெட்ரோல் டீசல் விலைகளிலும் மாற்றம் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த முறை ஏற்பட்ட கூட்டத்தில் சிலிண்டர் விலை ரூபாய் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.