மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

December 23, 2022

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நமது நாட்டில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை மும்பை கிளென்மார்க் நிறுவனம், கனடாவின் சனோடைஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது. மூக்கு வழியேயான இந்த மருந்தை 18 […]

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நமது நாட்டில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை மும்பை கிளென்மார்க் நிறுவனம், கனடாவின் சனோடைஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியது. மூக்கு வழியேயான இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம்.

இந்த மருந்தை அவசரகாலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்தது. இந்நிலையில், மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்து, பூஸ்டராக பயன்படுத்த கொரோனா தடுப்பு திட்டத்தில் சேர்க்க அனுமதி வழங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu