கச்சா எண்ணெய்க்கு மீண்டும் விண்ட்ஃபால் வரி விதிப்பு - மத்திய அரசு

April 19, 2023

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால், அதிக லாபம் கிடைக்கிறது. அதனை ஒழுங்கு படுத்தும் நோக்கில், மத்திய அரசு விண்ட்ஃபால் வரியை விதித்து வருகிறது. அந்த வகையில், எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதால், சர்வதேச சந்தையில் விலைகள் உயர்ந்து உள்ளன. எனவே, மீண்டும் கச்சா எண்ணெய்க்கு விண்ட்ஃபால் வரி விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு டன்னுக்கு 6400 ரூபாய் […]

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால், அதிக லாபம் கிடைக்கிறது. அதனை ஒழுங்கு படுத்தும் நோக்கில், மத்திய அரசு விண்ட்ஃபால் வரியை விதித்து வருகிறது. அந்த வகையில், எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதால், சர்வதேச சந்தையில் விலைகள் உயர்ந்து உள்ளன. எனவே, மீண்டும் கச்சா எண்ணெய்க்கு விண்ட்ஃபால் வரி விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஒரு டன்னுக்கு 6400 ரூபாய் விண்ட்ஃபால் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், டீசல் மீதான ஏற்றுமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரி விலக்கு தொடர்ந்து நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் புதிய விண்ட்ஃபால் வரி முறைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உத்தரவுகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu