அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல விமானங்களை அவசரமாக தரையிறக்கியது. ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு.
அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ், நேற்று ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறால் பல விமானங்களை நடுவழியில் நிறுத்தி தரையிறக்கியது. இதனால் டென்வர், நியூயார்க், ஹூஸ்டன் மற்றும் சிகாகோ விமான நிலையங்களில் விமான சேவைகள் தாமதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான பயணிகள் அவதிபட்டனர். சமீபத்தில் அமெரிக்க விமானப் போக்குவரத்து துறையில் இத்தகைய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் அலாஸ்கா ஏர்லைன்ஸும் இதேபோன்ற தொழில்நுட்ப பிரச்சனையால் சேவைகளை பல மணி நேரம் நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.