ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி ஏற்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
பீகாரில் தற்போது ராஜீவ் ரஞ்சன்சிங் என்ற லாலன்சிங் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவராக உள்ளார். இதன் செயற்குழு கூட்டம் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் பீகார் மாநில முதலமைச்சர் ஆக இருக்கும் நிதீஷ்குமார் புதிய கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கட்சியிடையே பிளவை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. மேலும் இந்திய கூட்டணி நிதிஷ்குமாரை அந்த கூட்டணி ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் அதனால் அவர் கூட்டத்தில் இருந்து பாதியிலே வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.