யூனிவர் காயின் நிறுவனத்தின் நிதி மோசடி அம்பலம்

September 20, 2022

கிருஷ்ணகிரியில் யூனிவர் காயின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் வர்த்தகம் மூலம் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 7.7 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு வாரத்திற்கும் 93 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள், கோடிக்கணக்கான பணத்தை, அந்த நிறுவனத்தில் நிதி வைப்பு வைத்துள்ளனர். மேலும், இந்த நிறுவனத்தின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு, சில ராணுவ வீரர்கள் இந்த நிறுவனத்தில் முகவர்களாக இணைந்துள்ளனர். […]

கிருஷ்ணகிரியில் யூனிவர் காயின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் வர்த்தகம் மூலம் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 7.7 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், ஒவ்வொரு வாரத்திற்கும் 93 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. அதனை நம்பி ஆயிரக்கணக்கான மக்கள், கோடிக்கணக்கான பணத்தை, அந்த நிறுவனத்தில் நிதி வைப்பு வைத்துள்ளனர்.

மேலும், இந்த நிறுவனத்தின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு, சில ராணுவ வீரர்கள் இந்த நிறுவனத்தில் முகவர்களாக இணைந்துள்ளனர். அதிகமான நபர்களை திட்டத்தில் சேர்க்கும் முகவர்களுக்கு, பல சலுகைகளை வழங்கி, இந்த நிறுவனம் கவர்ந்துள்ளது. எனவே, பலரும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை இதில் சேர்த்துள்ளனர். இந்த முகவர்கள் மூலம், ராணுவ வீரர்கள் மத்தியில் மாபெரும் பண மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த யுனிவர் காயின் மோசடியில் கிட்டத்தட்ட 500 கோடி முதல் 1000 கோடி மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிறுவனத்தை அருண்குமார் என்பவர் ஆரம்பித்துள்ளார். மக்கள், பணத்தை நிறுவனத்தில் செலுத்திய பின்னர், குறிப்பிட்ட சில வாரங்களுக்கு, பிரச்சாரத்தில் கூறியபடி பணம் திருப்பிக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், சில வாரங்கள் கழித்து, பணத்தை தராமல் மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மீது குவிந்த இத்தகைய புகார்களை விசாரித்ததில், உண்மை தெரிய வந்து, நிறுவனத்தின் ஓசூர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், அருண் குமாரின் அலுவலகம் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், சொத்து ஆவணங்கள், ரொக்கப் பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர். அத்துடன், அருண்குமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தொடர் விசாரணையில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu