வரும் மார்ச் 14ஆம் தேதி வரையில், ஆதார் அட்டையில் இலவசமாக முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம் என UIDAI தெரிவித்துள்ளது.
டிசம்பர் 14ஆம் தேதி வரை, ஆதார் அட்டையில் இலவசமாக முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த வரம்பு மார்ச் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதள முகவரியில், பொதுமக்கள் முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றம் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு பாஸ்வேர்ட் அனுப்பப்பட்டு, மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முறையான முகவரி ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.