டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பால் சீனாவுக்கான ஏற்றுமதி 35% வீழ்ச்சியடைந்தது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி உயர, சீனா மொத்த வர்த்தக உபரியாக $103.2 பில்லியன் வந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றதும், உலக நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கும் வரிகளை குறைக்க வேண்டும் எனக் கூறி, இல்லையெனில் பரஸ்பர வரிகளை அமல்படுத்துவேன் என்றார். அதன் விளைவாக சீனாவும் பதில் நடவடிக்கைகள் எடுத்ததால், இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் மோசமாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதத்தை விட இந்த ஆண்டு அதே மாதத்தில் சீனாவின் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 35% குறைந்தது. ஆனால் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரித்து, மொத்த வர்த்தக உபரி 103.2 பில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் டிரம்ப், சீன தலைவர் ஜி ஜின்பிங்குடன் பேசித், மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்க ஒப்புக்கொண்டுள்ளார்.