அமெரிக்கா-சீனா வர்த்தக போர்: வரி உயர்வு மற்றும் பதிலடி நடவடிக்கைகள்

April 11, 2025

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்கா இறக்குமதி செய்யும் பிற நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை அறிவித்தார். ஏப்ரல் தொடக்கத்தில், இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டது, மேலும் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இதே போன்று வரி உயர்த்தப்பட்டது. இந்தியா இந்த வரி நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றவில்லை, ஆனால் சீனா பதிலடி அளித்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் […]

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்கா இறக்குமதி செய்யும் பிற நாடுகளின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதை அறிவித்தார். ஏப்ரல் தொடக்கத்தில், இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிக்கப்பட்டது, மேலும் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இதே போன்று வரி உயர்த்தப்பட்டது. இந்தியா இந்த வரி நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றவில்லை, ஆனால் சீனா பதிலடி அளித்து, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி உயர்த்தியது. ஆரம்பத்தில் 84 சதவீதம் இருந்த வரி தற்போது 125 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்த வர்த்தக போரின் பின்னணி, சீனா அமெரிக்காவிலிருந்து ஏற்கனவே இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிக வரி விதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதித்து பதிலளித்தார். இந்நிலையில் சீனா அமெரிக்காவின் ஹாலிவுட் படங்களுக்கு தடை விதித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu