அமெரிக்க பொருளாதார வளர்ச்சி 1.1%

April 28, 2023

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1.1% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 3.2% ஆகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 2.6% ஆகவும், பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்க பொருளாதாரத்தில் 70% ஆக இருக்கும் நுகர்வோர் செலவினங்கள், வருடாந்திர அடிப்படையில் 3.7% உயர்வை பதிவு செய்துள்ளன. இது, கடந்த 2 ஆண்டுகளில் பதிவான வேகமான வளர்ச்சி என சொல்லப்பட்டுள்ளது. […]

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 1.1% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் 3.2% ஆகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் 2.6% ஆகவும், பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்க பொருளாதாரத்தில் 70% ஆக இருக்கும் நுகர்வோர் செலவினங்கள், வருடாந்திர அடிப்படையில் 3.7% உயர்வை பதிவு செய்துள்ளன. இது, கடந்த 2 ஆண்டுகளில் பதிவான வேகமான வளர்ச்சி என சொல்லப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி 1.9% அளவில் இருக்கும் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால், தொடர்ச்சியாக நிகழ்ந்த அமெரிக்க வங்கிகளின் தோல்விகள் மற்றும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் நடவடிக்கைகள் ஆகியவற்றால், 1.1% அளவு மட்டுமே வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், அமெரிக்காவின் பணவீக்கம் சற்று குறைந்திருந்தாலும், அந்நாட்டின் மத்திய வங்கியின் இலக்கை தாண்டி பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu