இன்டெல் நிறுவனத்தில் 10% பங்குகளைப் பெற்ற அமெரிக்க அரசு

August 25, 2025

டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை – இன்டெல் மிகப்பெரிய பங்குதாரராக மாறியது அமெரிக்க அரசு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளின் மீது வரி விதிப்புகள் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான இன்டெல், தனது வணிகத்தில் 10% பங்குகளை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பெரிய மானியங்களுக்கு […]

டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கை – இன்டெல் மிகப்பெரிய பங்குதாரராக மாறியது அமெரிக்க அரசு

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் வெளிநாடுகளின் மீது வரி விதிப்புகள் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், உலகின் முன்னணி சிப் உற்பத்தியாளரான இன்டெல், தனது வணிகத்தில் 10% பங்குகளை அமெரிக்க அரசாங்கத்திற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பெரிய மானியங்களுக்கு ஈடாக, வாஷிங்டனுக்கு பங்குகளை வழங்க வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அமெரிக்க அரசு 433.3 மில்லியன் பொதுப் பங்குகளைப் பெற்றுள்ளது. இது மொத்தத்தில் 9.9% பங்குகளாகும். இதன்மூலம் இன்டெல் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்க அரசு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu