அமெரிக்காவிடம் இருந்து 24,000 துப்பாக்கிகள் இஸ்ரேல் கொள்முதல்

November 7, 2023

இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து 24 ஆயிரம் துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய உள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சரான இடாமர் மக்களுக்கு தாக்குதல் துப்பாக்கிகளை கொடுத்து படை ஒன்றை உருவாக்கி வருகிறார். இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவிற்கு துப்பாக்கிகளுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளது. இதனை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிசீலித்து வருகின்றனர். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொடுப்பதால் அதனை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்ற அச்சம் அமெரிக்க அரசுத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 34 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களுக்கு நேரடியாக அமெரிக்க ஆயுத […]

இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து 24 ஆயிரம் துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய உள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சரான இடாமர் மக்களுக்கு தாக்குதல் துப்பாக்கிகளை கொடுத்து படை ஒன்றை உருவாக்கி வருகிறார். இந்நிலையில், இஸ்ரேல் அமெரிக்காவிற்கு துப்பாக்கிகளுக்கான ஆர்டர்களை வழங்கியுள்ளது. இதனை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிசீலித்து வருகின்றனர். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொடுப்பதால் அதனை பாலஸ்தீன மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்ற அச்சம் அமெரிக்க அரசுத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் 34 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களுக்கு நேரடியாக அமெரிக்க ஆயுத உற்பத்தியாளர்களிடம் ஆர்டர்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது.
எனினும் இதற்கு அமெரிக்கா வெளியுறவுத் துறையின் அனுமதி பெற வேண்டும். அதோடு இந்த துப்பாக்கிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட உள்ளன என்பது பற்றி இஸ்ரேலிடம் கேட்க வேண்டும் என்று அமெரிக்க உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu