ஜெலன்ஸ்கி - ஜீ ஜின்பிங் தொலைபேசி உரையாடல்

April 27, 2023

கடந்த மார்ச் மாதம், சீன அதிபர் ஜீ ஜின்பிங் ரஷ்ய பயணம் மேற்கொண்டார். ரஷ்ய அதிபர் புதினுடனான அவரது சந்திப்பு, சீனா மற்றும் ரஷ்யா இடையிலான உறவை பலப்படுத்தியது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் சீனா அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர், தொலைபேசி வாயிலாக உரையாடல் மேற்கொண்டு உள்ளனர். உக்ரைன் ரஷ்யா போரில், இந்த ஒரு மணி நேர உரையாடல் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. இது குறித்த தகவல் தற்போது சர்வதேச கவனத்தை […]

கடந்த மார்ச் மாதம், சீன அதிபர் ஜீ ஜின்பிங் ரஷ்ய பயணம் மேற்கொண்டார். ரஷ்ய அதிபர் புதினுடனான அவரது சந்திப்பு, சீனா மற்றும் ரஷ்யா இடையிலான உறவை பலப்படுத்தியது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் சீனா அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர், தொலைபேசி வாயிலாக உரையாடல் மேற்கொண்டு உள்ளனர். உக்ரைன் ரஷ்யா போரில், இந்த ஒரு மணி நேர உரையாடல் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது. இது குறித்த தகவல் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

“சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடனான தொலைபேசி உரையாடல், அர்த்தம் நிறைந்ததாக இருந்தது” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதே வேளையில், சீனா தரப்பில் இருந்து, “உக்ரைன் அதிபரின் அழைப்பின் பெயரில் இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. உக்ரைன் ரஷ்யா போரை சீனா வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. எப்போதும் அமைதியின் பக்கமே சீனா நிற்கும். பேச்சு வார்த்தைகள் மூலம் அமைதியை மேம்படுத்த சீனா முனைப்பு காட்டி வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu