ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் வெள்ளிக்கிழமை அன்று கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்த முடிவு செய்துள்ளதாக ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை (MSDF) அறிவித்துள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், கொரியாக்களை பிரிக்கும் இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்திற்கு (DMZ) வருகை புரிவதற்கு முன்னதாக தென்கொரியாவில் வட கொரியாவின் ஆயுத சோதனைகளை கண்டிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் ராணுவ வலிமையை அதிகரிக்க ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்த முடிவுசெய்துள்ளதாக ஜப்பானின் கடல்சார் தற்காப்புப் படை (MSDF) தெரிவித்துள்ளது.














