அமெரிக்கா - வங்கியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

April 11, 2023

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. தற்போது, லூயிஸ்வில்லி நகரில் உள்ள ஓல்டு நேஷனல் வங்கியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. வங்கியில் பணியாற்றி வந்த கானர் ஸ்டர்ஜன் என்ற 25 வயது இளைஞர் தனது சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகர சம்பவத்தில், ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. வங்கி ஊழியரான கானர் தனது […]

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. தற்போது, லூயிஸ்வில்லி நகரில் உள்ள ஓல்டு நேஷனல் வங்கியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. வங்கியில் பணியாற்றி வந்த கானர் ஸ்டர்ஜன் என்ற 25 வயது இளைஞர் தனது சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த அதிர்ச்சிகர சம்பவத்தில், ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

வங்கி ஊழியரான கானர் தனது சமூக வலைதள பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டை நேரடியாக ஒளிபரப்பு செய்துள்ளார். தற்போது, கானரின் வீடியோ பதிவை நீக்கி உள்ளதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. சக ஊழியர்களை சுட்ட பின்னர், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு கானர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இத்துடன் சேர்த்து, கடந்த ஓராண்டில் மட்டும், அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு தொடர்பான வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44,000 ஐ தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu