சாலமன் தீவு நாட்டின் அரசாங்கம் தனது துறைமுகங்களுக்குள் நுழையும் அமெரிக்க கடற்படை கப்பல்களுக்கு தடை விதித்துள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அதாவது சாலமன் தீவுநாடானது மே மாதம் சீனாவுடன் ஒரு பாதுகாப்பு உடன்படிக்கை செய்ததில் இருந்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் உள்ள உறவை சற்று தளர்த்தியுள்ளது. அதற்கு முதல்படியாக ஆகஸ்டு 29 அன்று சாலமன் தீவு அமெரிக்காவிற்கு ஒ௫ அறிக்கை விடுத்தது. அவ்வறிக்கையில், சாலமன் தீவுநாட்டின் துறைமுகத்திற்குள் நுழையும் அனைத்து கடற்படை கப்பல்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான புதிய விதிமுறைகள் நிலுவையில் உள்ளது என ௯றப்பட்டி௫ந்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள சாலமன் தீவின் பிரதம மந்திரி மனாசே சோகவாரேயின் செய்தித் தொடர்பாளர் ஹொனியாரா தற்போது வந்தடைந்த மெர்சி என்ற அமெரிக்க கடற்படையின் மருத்துவக் கப்பலை பிரதமர் வரவேற்பார் என்று கூறினார். ஆனால் தடைக்காலத்திற்கு முன்பே மெர்சி கப்பல் வந்துவிட்டதாக அமெரிக்க தூதரகம் கூறியது. இதற்கிடையில் கடந்த வாரம், அமெரிக்க கடலோர காவல்படையின் கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக சாலமன் தீவுகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














