நியூயார்க்கில் 26-ஆம் தேதி கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.
2024 ஆம் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், வரும் 26-ஆம் தேதி நியூயார்க்கில் தொடங்கவுள்ளது. இதில் இத்தாலியின் நம்பர் ஒன் வீரர் ஜானிக் சின்னர், முதல் சுற்றில் 93-வது நிலை வீரரான அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொள்கிறார். ஒலிம்பிக் மற்றும் நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியன் நோவக் ஜோகோவிச், தகுதி நிலை வீரருடன் மோதுகிறார். இந்தியாவின் சுமித் நாகல், 40வது தரவரிசை வீரரான நெதர்லாந்து வீரர் டாலன் கிரீஸ்க்பூரை எதிர்கொள்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் தகுதிச்சுற்று மூலம் பிரதான சுற்றை எட்டும் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.