ரூ.979 கோடியை திருப்பி தர 'ஏர் - இந்தியா'வுக்கு அமெரிக்கா உத்தரவு

November 16, 2022

'ஏர் - இந்தியா' நிறுவனம் 979 கோடி ரூபாய் டிக்கெட் தொகையை செலுத்த அமெரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏர் - இந்தியா நிறுவனம் பல விமான சேவைகளை ரத்து செய்தது. ஆனால், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் பதிவு செய்திருந்த பயணியருக்கு அதற்கான பணத்தை ஏர் - இந்தியா திருப்பித் தரவில்லை. இது குறித்து, அமெரிக்க போக்குவரத்துத் துறையினரிடம் ஏராளமானோர் புகார் செய்தனர். இதையடுத்து அமெரிக்க போக்குவரத்துத் துறை, ஏர் - […]

'ஏர் - இந்தியா' நிறுவனம் 979 கோடி ரூபாய் டிக்கெட் தொகையை செலுத்த அமெரிக்க போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏர் - இந்தியா நிறுவனம் பல விமான சேவைகளை ரத்து செய்தது. ஆனால், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் டிக்கெட் பதிவு செய்திருந்த பயணியருக்கு அதற்கான பணத்தை ஏர் - இந்தியா திருப்பித் தரவில்லை. இது குறித்து, அமெரிக்க போக்குவரத்துத் துறையினரிடம் ஏராளமானோர் புகார் செய்தனர்.

இதையடுத்து அமெரிக்க போக்குவரத்துத் துறை, ஏர் - இந்தியா நிறுவனம் பயணியருக்கு திருப்பித்தர வேண்டிய 979 கோடி ரூபாயுடன், அபராதமாக 11.33 கோடி ரூபாயை சேர்த்து செலுத்த உத்தரவிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu