யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது.
ராணுவ விமானங்கள் மற்றும் போர் கப்பல்கள் கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஹவுதிகளின் ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் சேதமடைந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹோதைதா மற்றும் சனா நகரங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றன. ஹவுதிகள், காஸாவில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ள எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம், அமெரிக்க போர் கப்பல்களுக்கு நடந்த தாக்குதலுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்றனர். இந்நிலையில், ஈரான் தூதர் ராஜ் இலாஹி, ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதிகள் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா முக்கிய பங்கு வகிக்கலாம் எனக் கூறியுள்ளார்.