சீனாவில் உருவாக்கப்பட்ட Artificial Intelligence (AI) சேவையான டீப் சீக் பற்றிய தனிநபர் பாதுகாப்பு மற்றும் மொத்த பாதுகாப்பு சிக்கல்களால் பல நாடுகள் அதைப் பற்றிய தடைகளை விதிக்க தொடங்கியுள்ளன. தென் கொரியா, பாதுகாப்பு காரணங்களால், DeepSeek-ஐ புதிய பதிவிறக்கத்திலிருந்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஆனால், UK அரசு இதை பதிவிறக்கம் செய்வது ஒரு தனிப்பட்ட தேர்வு என்றும், புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
DeepSeek, OpenAI ChatGPT-க்கு நிகராக செயல்படக் கூடியதாக கருதப்படுகிறது. ஆனால், அதன் சீனாவில் உள்ள அதன் சர்வரில் தரவை சேமிக்கும் முறை பற்றிய பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளன. தைவான், ஆஸ்திரேலியா நாடுகள், அரசாங்க சாதனங்களில் இதை தடை செய்துள்ளன. இத்தாலி முழுமையாக தடை செய்தது, மேலும் அமெரிக்கா தடை விதிக்க சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. UK அரசு, DeepSeek பயன்பாட்டை தனிப்பட்ட தேர்வு என்றாலும், AI பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்கள் உருவாக்க பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், TikTok போன்று சீனாவில் உருவாக்கப்பட்ட செயலிகள் UK அரசு சாதனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.