உத்தர பிரதேசத்தில் நவம்பர் 13-ல் 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 9 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ல் நடைபெறும். இந்த தேர்தலில், சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. இங்கு 7 தொகுதிகளில் சமாஜ்வாதியும், 2 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.