பிரதமர் நரேந்திர மோடி வருகிற சனிக்கிழமை (8-ந்தேதி) சென்னை வருகிறார். பிரதமர் மோடி சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்து விட்டு விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தையும் திறந்து வைத்து பிரமாண்ட அரசு திட்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கிறார். சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.