பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்க பட உள்ளது.
பொங்கல் பண்டிகை மற்றும் அதனை தொடர்ந்து வரும் விடுமுறைகள் முன்னிட்டு பயணிகளின் நலனுக்காகவும் சென்னையிலிருந்து நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி ஜனவரி மாதம் 4,11,18,25 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது. மறுமார்க்கமாக மேற்கூறிய தேதியில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.