இத்தாலியில் பேருந்து விபத்தில் 21 பேர் பலி

October 4, 2023

இத்தாலியில் வெனிஸ் நகரில் பேருந்து விபத்து ஏற்பட்டதில் 21 பேர் பலியாகினர். இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள மார்க்கெராவுக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அது மேஸ்டரே மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு ரயில் பாதைகளுக்கு அருகில் பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினார் சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்த பேருந்தில் இத்தாலி நாட்டவர்ளுடன் வெளிநாட்டினரும் பயணம் செய்தனர். […]

இத்தாலியில் வெனிஸ் நகரில் பேருந்து விபத்து ஏற்பட்டதில் 21 பேர் பலியாகினர்.
இத்தாலியின் வெனிஸ் நகரில் உள்ள மார்க்கெராவுக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அது மேஸ்டரே மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது மேம்பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு ரயில் பாதைகளுக்கு அருகில் பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட 21 பேர் பலியாகினார் சுமார் 20 பேர் காயமடைந்தனர். இந்த பேருந்தில் இத்தாலி நாட்டவர்ளுடன் வெளிநாட்டினரும் பயணம் செய்தனர்.
இந்த கோர விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரியவில்லை. தற்போது விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu