காணுன் சூறாவளி ஜப்பானை கடுமையாக தாக்கி உள்ளது. ஜப்பானிய மொழியில் காணுன் என்பதற்கு 'மிகவும் வலிமையான' என்று பொருளாகும். அதற்கேற்றவாறு, கடுமையான பாதிப்பை இந்த சூறாவளி ஏற்படுத்தி உள்ளது.
ஜப்பான் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் காணுன் சூறாவளியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. சூறாவளியின் போது, மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக சொல்லப்படுகிறது. எனவே, ஒகினாவா மற்றும் அதை சுற்றிய தீவுப் பகுதிகளுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி உற்றனர். மேலும், 35% வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பேரிடர் அபாய பகுதியில் வசித்து வந்த மக்கள், வேகமாக அப்புறப்படுத்தப்பட்டதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வாரயிறுதியில், கிழக்கு சீனா பகுதியில் பயணிக்கும் போது, காணுன் சூறாவளி வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.














