புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விக்ரம் மிஸ்ரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விக்ரம் மிஸ்ரி 1989 ஆம் ஆண்டு பிரிவு ஐ எஃப் எஸ் அதிகாரியானார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஜூலை 15ஆம் தேதி முதல் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி ஏற்க உள்ளார். தற்போது மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்து வரும் வினய் குவாத்ராவின் பதவி காலம் ஜூலை 14ஆம் தேதி உடன் முடிவடைய நிலை உள்ள நிலையில் விக்ரம் மிஸ்ரி இந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.