விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக திமுக கட்சியை சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். எனவே, அந்தப் பகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது, அதன் பகுதியாக விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இடைத் தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் எனவும், ஜூன் 26 ஆம் தேதி வேப்பமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து, ஜூலை 13ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில், ஜூலை 15ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.