நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 17ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது 18ம் தேதியாக மாற்றி ஏற்கனவே அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான சிற்றறிக்கை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.