கண்ணாடி கூரையுடன் 'விஸ்டாடோம்' ரயில் பெட்டிகள் : சென்னை ஐ.சி.எப். தயாரிப்பு

December 1, 2022

சென்னை ஐ.சி.எப்., ஆலையில், இயற்கை அழகை காணும் வகையில் கண்ணாடி கூரையோடு 11 'விஸ்டாடோம்' ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சென்னை பெரம்பூரில் இருக்கும் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் எல்.எச்.பி., விஸ்டாடோம் சுற்றுலா பயணியர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறுகையில், இந்த நிதி ஆண்டில் மொத்தம் 20 விஸ்டாடோம் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது, 11 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கண்ணாடி கூரைகளுடன் பெரிய கண்ணாடி ஜன்னல்களும், வசதியான இருக்கைகளும் இந்த […]

சென்னை ஐ.சி.எப்., ஆலையில், இயற்கை அழகை காணும் வகையில் கண்ணாடி கூரையோடு 11 'விஸ்டாடோம்' ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

சென்னை பெரம்பூரில் இருக்கும் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் எல்.எச்.பி., விஸ்டாடோம் சுற்றுலா பயணியர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஐ.சி.எப்., அதிகாரிகள் கூறுகையில், இந்த நிதி ஆண்டில் மொத்தம் 20 விஸ்டாடோம் பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது, 11 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

கண்ணாடி கூரைகளுடன் பெரிய கண்ணாடி ஜன்னல்களும், வசதியான இருக்கைகளும் இந்த விஸ்டாடோம் ரயில் பெட்டிகளில் இருக்கும். மேலும் இதில், 360 டிகிரி கோணத்திலும் இயற்கையை ரசிக்க முடியும். ஒரு பெட்டியில் 44 இருக்கைகள் மட்டுமே இருக்கும். 'வைபை' மற்றும் ஜி.பி.எஸ்., உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் உண்டு என்று அவர்கள் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu