விவோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 10499 ரூபாய் முதல் இந்த கைபேசி விற்பனை செய்யப்படுகிறது.
விவோ நிறுவனத்தின் விவோ டி 3 லைட் 5ஜி கைபேசி இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த கைபேசியில் 6 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்ளது. மேலும், 50 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் செயல்படும் இந்த கைபேசி, 4ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு ஆகிய 2 வகையறாக்களில் வெளியாகி உள்ளது. இவற்றின் விலை முறையே 10499 மற்றும் 11499 ஆக சொல்லப்பட்டுள்ளது.