வோடபோன் ஐடியாவின் 33% பங்குகளை வாங்கும் இந்திய அரசு

February 4, 2023

கடனில் தத்தளித்து வரும் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு, இறுதியாக அரசின் ஆதரவு கிடைத்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 33% பங்குகளை இந்திய அரசு ஏற்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் வோடபோன் நிறுவனம் ஆகியவை இணைந்து, 20000 கோடி ரூபாய் வரை திரட்டுவதற்கு உறுதியளித்துள்ளன. அதன் பிறகே, பங்குகளை ஏற்பதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், விரைவில், அதிவேக 5ஜி இணைய சேவையை தொடங்குவதாகவும் வோடபோன் உறுதி அளித்துள்ளது. வோடபோன் நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய […]

கடனில் தத்தளித்து வரும் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு, இறுதியாக அரசின் ஆதரவு கிடைத்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 33% பங்குகளை இந்திய அரசு ஏற்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் வோடபோன் நிறுவனம் ஆகியவை இணைந்து, 20000 கோடி ரூபாய் வரை திரட்டுவதற்கு உறுதியளித்துள்ளன. அதன் பிறகே, பங்குகளை ஏற்பதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், விரைவில், அதிவேக 5ஜி இணைய சேவையை தொடங்குவதாகவும் வோடபோன் உறுதி அளித்துள்ளது.

வோடபோன் நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தக நாளின் இறுதியில் 7 ஆக நிறைவடைந்தன. ஆனால், இந்திய அரசு 10 மதிப்பிற்கு பங்குகளை வாங்க உள்ளது. டிசம்பர் மாத இறுதியில், வோடபோன் நிறுவனம் 48% பங்குகளையும், ஆதித்ய பிர்லா குழுமம் 27% பங்குகளையும் பெற்றிருந்தன. மொத்தமாக, 75% வோடபோன் ஐடியா பங்குகளாக இருந்தது. இது தற்போது 50% ஆக குறைய உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu