$10 பில்லியனுக்கும் மேலான பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை விற்றார் வாரன் பபெட்

October 8, 2024

உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம், பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை தொடர்ச்சியாக விற்று வருகிறது. கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட இந்த விற்பனை மூலம், பெர்க்ஷயர் $10 பில்லியனை திரட்டி உள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களில் நடந்த 14வது சுற்று விற்பனையிலேயே $383 மில்லியன் வருவாய் கிடைத்துள்ளது. ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து, 94 வயதான பஃபெட் தனது பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை தொடர்ந்து குறைத்து வருகிறார். இதன் […]

உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனம், பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை தொடர்ச்சியாக விற்று வருகிறது. கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட இந்த விற்பனை மூலம், பெர்க்ஷயர் $10 பில்லியனை திரட்டி உள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று நாட்களில் நடந்த 14வது சுற்று விற்பனையிலேயே $383 மில்லியன் வருவாய் கிடைத்துள்ளது.

ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து, 94 வயதான பஃபெட் தனது பேங்க் ஆப் அமெரிக்கா பங்குகளை தொடர்ந்து குறைத்து வருகிறார். இதன் காரணமாக, பங்கு விலையும் பாதிக்கப்பட்டுள்ளது. பங்கு விலை $39ஐ நெருங்கும் போதெல்லாம், பஃபெட்டின் விற்பனை வேகம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பெர்க்ஷயர் இன்னும் பாங்க் ஆப் அமெரிக்காவில் 10.1% பங்குகளை வைத்திருக்கிறது. இதன் மதிப்பு சுமார் $31.4 பில்லியன் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu