வயநாடு நிலச்சரிவு : ரூ.153 கோடியை பிடித்தம் செய்த மத்திய அரசு

December 7, 2024

வயநாடு நிலசரிவின் போது பயன்படுத்தப்பட்ட விமானத்திற்கு மத்திய அரசு ரூபாய் 153 கோடியை பிடித்தம் செய்துள்ளது. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் மாநில பேரிடர் குழு, தேசிய பேரிடர் குழு மற்றும் இந்திய ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.இந்த நிலச்சரிவின் பாதிப்பால் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், […]

வயநாடு நிலசரிவின் போது பயன்படுத்தப்பட்ட விமானத்திற்கு மத்திய அரசு ரூபாய் 153 கோடியை பிடித்தம் செய்துள்ளது.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் மாநில பேரிடர் குழு, தேசிய பேரிடர் குழு மற்றும் இந்திய ராணுவம் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.இந்த நிலச்சரிவின் பாதிப்பால் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கேரள அரசு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவித்து ₹2000 கோடி சிறப்பு நிதி வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தது. ஆனால், மத்திய அரசு இதற்கு பதிலளிக்காமல், கேரள மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ₹153 கோடியை பிடித்தம் செய்து விட்டது. இது திடீரென அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், நிலச்சரிவின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான கூடுதல் நிதி தேவைப்படுவதாகக் கூறி, மத்திய அரசு ஆண்டு தோறும் வழங்கும் பேரிடர் நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என கேரள அரசு கோரியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu