மேற்கு வங்கத்தில் அரசு பள்ளி ஊழியர் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக வழக்கு நடைபெற்று வந்தது. இதில், கடந்த திங்கட்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 240 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான பணி நியமன ஆணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2016 ஆம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் நியமிக்கப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. மார்ச் 20ம் தேதியுடன் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு திங்கட்கிழமை வெளியானது. அதன்படி, 2016 ஆம் ஆண்டு ஆள் தேர்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட்ட அரசு பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணை மேற்கொண்டு சிபிஐ அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காலி பணியிடங்களுக்கு புதிதாக ஆள் தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு அரசியல் களத்தில் விவாத பொருளாகியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் பரஸ்பர குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர்.