மில்கி மிஸ்ட் நிறுவனத்தில் 800 கோடி முதலீடு - வெஸ்ட் பிரிட்ஜ்

மில்கி மிஸ்ட் பால் பொருட்கள் நிறுவனம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ளது. இது தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, வெஸ்ட் பிரிட்ஜ் கேப்பிட்டல் என்ற முதலீட்டு நிறுவனம், மில்கி மிஸ்ட்டில் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம், மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 7000 கோடியாக உயரும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதலே, வெஸ்ட் பிரிட்ஜ் நிறுவனம் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு நடவடிக்கை […]

மில்கி மிஸ்ட் பால் பொருட்கள் நிறுவனம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ளது. இது தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, வெஸ்ட் பிரிட்ஜ் கேப்பிட்டல் என்ற முதலீட்டு நிறுவனம், மில்கி மிஸ்ட்டில் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம், மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 7000 கோடியாக உயரும் என சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதலே, வெஸ்ட் பிரிட்ஜ் நிறுவனம் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. தற்போது, இந்த நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மில்கி மிஸ்ட் நிறுவனம், நிதி திரட்டுவதற்காக பிறப்பித்த அறிவிப்பின் பெயரில், வெஸ்ட் பிரிட்ஜ் முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu